பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதநாட்டில் தேசிய இயக்கங்கள் 20 தமிழ் நாட்டைத் தவிர தென் இந்திய மாநிலங்களில் எந்த ஆதரவும் இல்லை. எனவே திராவிட கழகத்திலிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்று பிரிந்த போது தமிழ் நாட்டை மட்டும் எல்லையாக வைத்து திராவிட நாடு தனிநாடு என்று தீர்மானம் போட்டார்கள். பின்னர் பிரிவினை என்பது கை விடப்பட்ட போது அல்லது பின் வாங்கப்பட்ட போது தமிழ் தேசீயம் என்றும், மாநில சுயாட்சி என்றும் கருத்துக்கள் சிதரி வெளிப்பட்டன. மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று அரசியல் தேசீயம் பேசப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உலக சமுதாயம், பாட்டாளி வர்க்க சர்வ தேசீயம் என்றெல்லாம் பேசிய போதிலும் தேசிய இனம் என்றும் மொழி வழி தேசீயம் என்றும் தேசீயம் பற்றிய கருத்துக்களைக் கூறிவருகின்றன. - இவ்வாறு இந்திய நாட்டில் தேசீயம் பற்றிப் பலவகையான கருத்துக்களும் கருத்து வடிவங்களும் விளக்கங்களும் வியாக்கியானங்களும் கூறப்பட்டு வந்திருக்கின்றன. பாரதநாட்டில் அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய முஸ்லிம் தேசீயம் தகர்ந்துவிட்டது. திராவிட தேசீயம் நடைமுறையில் நீர்த்துப் போய்விட்டது. மொழிவழி தேசியம் என்பது இந்திய தேசிய வட்டத்திற்குட்பட்டே மக்கள் மனதில் நிற்கிறது. இருப்பினும் இக்கருத்துக்களின் எச்சங்கள் நீடிக்கின்றன. எனவே பாரத நாட்டின் தேசீயத்தின் மெய்யான வடிவத்தைக் காணவேண்டும். அதனடிப்படையில் பாரத நாட்டுமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இந்துத்வ தேசீய ஒற்றுமை மூலம்தான் பாரத மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த ஒற்றுமைப்படுத்த முடியும். இதற்கு மகா கவி சுப்ரமணிய பாரதியின் சிந்தனையின் வழிகாட்டுதல் நமக்கும் பெரிதும் உதவுகின்றன. <ーヨー三>