பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-சிந்தனையும் அனுபவமும் 22 இன்னல்களுக்கும் நடுவே பாரதியார் தம்முடைய தேசப்பணியை ஆற்றினார். அதோடு ஆன்மீக வளர்ச்சியையும் எற்படுத்திக் கொண்டார். ஆன்மீகத்திற்கும் தேசீயத்திற்கும் முரண்பாடு இல்லையென்பதை நிரூபித்துக் காட்டினார். அத்வைத அனுபூதி தான் குறிக்கோள் என்பது உண்மையென்றாலும் இறைவணக்கம் கோவில் வழிபாடு முதலியவை அவசியமானவை என்பதையும் அவர்தம் நடத்தையிலேயே அனுஷ்டித்துக் காட்டினார் அவருடைய பூதவுடல் மறைந்ததே ஒழிய புகழுடல் என்றும் மங்காது. உலகத்திற்கு ஒரு மகத்தான உண்மையைப் புலப்படுத்திக் கொண்டேயிருக்கும். அது என்னவென்றால் மனித வாழ்க்கையில் ஆதாரமாய் இருக்கவேண்டிய ஆன்மீக உணர்ச்சி தெய்வ பக்தி என்பதுதான் ” என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து தெரிவது பாரதியின் தேசீயம், பாரத தேசீயம். அது தேசபக்தியும் தெய்வபக்தியும் இணைந்த தேசீயமாகும் என்பது தெளிவாகும். இன்னும், தேசிய கீதங்களின் சமர்ப்பணத்தில் தன் குருவாகிய நிவேதிதா தேவியே அப்பாட்டுக்குக் காரண பூதமென்று புகழ்ந்து பெருமையுடன் பாரதியார் சமர்ப்பணம் செய்திருக்கிறார், என்று திரு. குஞ்சிதபாதம் எழுதுகிறார். 1908-ம் ஆண்டில் முதன்முதல் வெளியான ஸ்வதேச கீதங்களின் சமர்ப்பணம் பின்வருமாறு: “றுரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலையை விளக்கியதை ஒப்ப, எனக்கு பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தியுபதேசத்தை புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்” என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.