பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசீயம் -அ. சீனிவாசன் 23 என்ற பெயரால் வெளியிடப்பட்டது. அதன் சமர்ப்பணமும் முகவுரையும் பின் வருமாறு. எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய யூரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிடுகிறார். பாரதியார் முன் வைத்துள்ள ஒப்பீடு:- றுரீகிருஷ்ணன் அர்ஜூனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலையைக் காட்டிய தொப்ப எனக்கு பாரத தேவியின் சம்பூரண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தியுபதேசத்தைப் புரிந்தருளியதாகக் குறிப்பிடுகிறார். எனவே இங்கு ரீகிருஷ்ணனுடைய விஸ்ரூபமும் பாரத தேவியின் சம்பூரண ரூபமும் ஒப்பிடப்படுகிறது.