பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரீகிருஷ்ணருடைய விஸ்வரூப தரிசனம் L: | ஆச்சரியங்களைப் பார் - 6. அர்ஜூனா, இன்று இங்கே என் உடலில் சராசரமான உலகம் முழுதும் ஒருங்கு நிற்பதைப் பார். இன்னும் வேறு நீ எதைக் காண விரும்பினும் அதை இங்கு காண் - 7. உன்னுடைய இயற்கையின் இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார் - 8. சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே இவ்வாறு உரைத்து விட்டு அப்பால் பெரிய யோகத் தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான் - 9. (அவ்வடிவம்) பலவாய்களும் பல விழிகளும் உடையது. பல அற்புதக் காட்சிகளை உடையது. பல திவ்யா பரணங்கள் பூண்டது. பல தெய்வீகப் படைகள் ஏந்தியது - 10. திவ்ய மாலைகளும், ஆடைகளும் புனைந்தது. திவ்ய கந்தங்கள் பூசியது. எல்லா வியப்புகளும் சான்றது. எல்லையற்றது. எங்கும் முகங்களுடைய தேவரூபம் - 11. வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம் - 12. அங்கு பல பகுதிப் பட்டதாய், வைய முழுதும் அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான் - 13. அப்போது தனஞ்சயன் பெருவியப்பெய்தி, மயிர் சிலிர்த்து