உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் [23] அக்கடவுளை முடியால் வணக்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான் - 14. அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன். பூத வைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்கு காண்கிறேன் - 15. பல தோளும், பல வயிறும், பல வாய்களும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நின்னை எங்கனும் காண்கிறேன். எல்லா வற்றுக்கும் ஈசனே எல்லாத் தன் வடிவாகக் கொண்டவனே உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன் — 16. மகுடமும் தண்டும் வலயமும் தரித்தாய், ஒளித்திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற் கரியதாக நினைக் காண்கிறேன் - 17. அழிவிலாய், அழிதற்குரியனவற்றில் மிகவும் சிறந்தது, வையத்தின் உயர் தனி உறையுளாவாய், கேடிலாய், என்றுமியல் அறத்தினைக் காப்பாய், சநாதனை புருஷன் நீயெனக் கொண்டேன். – 18. ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை, கணக்கிலாத்தோளினை, ஞாயிறும் திங்களும் நயனமாகக் கொண்டனை, எரியும் கனல் போலியலு முகத்தினை ஒளியால் முழுமையுலகையும் கொளுத்து வாய், இங்ங்ன முன்னைக் காண்கிறேன் - 19. வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடை வெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர் வெய்துகின்றன - 20.