பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

44. திருவினை வென்று வாழ்

திருவென்றால் செல்வம். செல்வம் என்பது பொருட்செல்வம், கல்விச்செல்வம் முதலிய எட்டு வகைச் செல்வங்களாகும். பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க என்று புதுமணத் தம்பதிகளை வாழ்த்துவார்கள். பதினாறும் பெற்று என்றால் பதினாறு குழந்தைகளைப் பெறுவது என்பதல்ல, பதினாறு வகை நலன்கள் என்று பொருளாகும். இச்செல்வத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது பாரதி வாக்கு.

திருவே, மலரின் மேவு திருவே, கமலமேவும் திருவே செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மையேறி வாழ்வேன், இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன் என்று பாரதியார் பாடுகிறார்.

திருவே. திருவே என்று திருமகளை அழைக்கிறார் பாரதி. திருமகள் எட்டு வகை செல்வங்களின் வடிவம். திருமகளின் அருளர்ல் எட்டு வகை செல்வங்களையும் பெற்று இல்லையெனும் கொடுமை இவ்வுலகில் இல்லை என்று ஆக்குவேன் எனக் கூறுகிறார்.

பொன், மணி, மாளிகை, மணிக்குளம், சோலை, அன்னம், நறுமணம் உள்ள நெய், பால், ஆடு, மாடு, அழகுடைய பரிகள் வீடு, நெடுநிலம் ஆகியவை அடங்கிய திருவை வென்று வாழ வேண்டுமென பாரதி வழி காட்டுகிறார்.

வறுமை என்னும் சிறுமையில் புதைந்துள்ள நிலை மாற வேண்டும். அதனால் ஏற்படும் வேதனையும் சோர்வும் போக வேண்டும்.

கீழ்மக்களின் அவமதிப்பு தொழில் கெட்டவர்களின் இணக்கம், கிணற்றினுள் மூழ்கிய விளக்கு போலச் செய்யும் முயற்சியெல்லாம் கெட்டு முடிதல், ஏழ்கடல் ஒடியும்ஒரு பயனும் எய்திட வழியில்லாமல் இருப்பது ஆகிய கொடுமை நோய் அந்த வறுமை நோய் ஒழிய வேண்டும்.