பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 89

பொன்னில், மணியில், பூவில் சாந்தில், விளக்கில், புன்சிரிப்பில், செழுமையான காட்டில், பொழில்களில் கழனியில், அதில் பாடுபடும் மக்களின் துணிவினில் மன்னன் முகத்தினில் வாழும் திருவினை வென்று வாழ வேண்டும்.

மண்ணுக்குள் உள்ள கனிவளங்களில் மலை வாய்ப்புகளில் கடல் ஆழத்தில் புண்ணிய வேள்விகளில், புகழில், மதியில், புதுமையில், பாவையில், நல்ல பாட்டில், கூத்தில், படத்தில், வெற்றி கொள் படையினில், பல விநயங்கள் அறிந்தவர் கடையில் நற்றவர் நடையினில் நல்ல நாவலர்களின் தேமொழியில் உள்ள திருவின், அந்த அன்னையின் அருளைப் பெற்று வென்று வாழ வேண்டுமென்ற பாரதி கூறுகிறார்.

பாரதி வறுமையின் கொடுமையை உணர்ந்தவர். நேரடியாக அனுபவித்தவர். அன்னிய ஆட்சியில் நாட்டு மக்கள் அனுபவித்த வறுமையின் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்தவர்.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ என்று மனம் நொந்து பாடினார்.

இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பாரத நாடு என்று பாரதி மனம் வேதனைப்பட்டு குறிப்பிடுகிறார்.

இத்தகைய வறுமை, பஞ்சம், நோய் முதலிய கொடுமைகளை வெறுத்த பாரதி நாட்டு மக்கள் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு எட்டு வகைத் திருவினை வென்று நல்வாழ்வு எய்திட வேண்டும் என்று நமது எதிர்காலத்தின் பிஞ்சுகளுக்கு பாரதி அறிவுரை கூறுகிறார்.

45. தீயோர்க்கு அஞ்சேல்

அஞ்சேல், அஞ்சேல் என்று அடிக்கடி குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார் பாரதி. இந்தப் புதிய ஆத்தி சூடியிலேயே கீழோர்க் கஞ்சேல், பேய்களுக்கஞ்சேல், சாவதற்கஞ்சேல், தொன்மைக்கஞ்சேல் என்றெல்லாம் செய்யுள்களைக் கூறியுள்ளார்.