பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 93

என்றும் தேச முத்து மாரியிடம் கேட்கிறார்.

துன்பமும் இல்லை - கொடும்

துன்பமும் இல்லை.

என்று பாரதி தனது தத்துவ தரிசனத்தில் பாடுகிறார்.

"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பினில் அழியுமடி - கிளியே’’

என்று கிளிப்பாட்டில் கூறுகிறார்.

'இன்பத்தை இனிதெனவும் - துன்பம்

இனிதில்லை என்றும் அவன்

எண்ணுவதில்லை’

என்றும்,

"துன்பத்தில் நொந்து வருவோம் - தன்னை

துரவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவாள்'

என்றும்,

"துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்’ என்றும், -

"துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை அன்பு நெறியினில் அறங்கள் வளர்த்திட ’’

என்றும் பாரதி கண்ணன் பாட்டுகளில் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

47. துாற்றுதல் ஒழி

தூற்றுதல் என்பது பிறரை அவதூறு செய்து தூற்றுதலாகும். 'கொடுத்தால் போற்றுவதும் கொடுக்காவிட்டால் தூற்றுவதும் வேண்டாம் .