பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாரதியின் புதிய ஆத்திசூடி O

'எண்ணம் கெடுதல் வேண்டாம் நல்லவே எண்ணல் வேண்டும்'

என்று பாரதி பாடுகிறார்.

கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது அரசியலிலும் பொது வாழ்விலும் இன்னும் நாம் சந்திக்கும் அத்தனை பேரிடையிலும் சகஜமாகும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் முதல் ஊரில், நாட்டில், உலகில் அத்தனை பிரச்சனைகளிலும் ஏற்படும். ஒவ்வொருவரும் சிந்திக்கும் போது, கருத்து மாறுபாடுகளும் வேறுபாடுகளும் தோன்றுவது இயல்பாகும். அவைகளைப் பேகித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே ஜனநாயக மரபாகும் தற்கால நாகரிக சிந்தனையாகும். கருத்தொற்றுமை உடன்பாடு! பொதுக்கருத்து இவ்வாறு முடிவுக்கு வருவது தான் முறையாகும். அதற் த பதில் சில சுயநலக்காரர்கள் ஆணவமும், ஆதிக்கக்குணமும் கொண்டவர்கள் தாங்கள் சொல்வதற்கு இசையாதவர்களுக்கும் தனக்கு ஆகாதவர்களுக்கும் எதிராக அவதூறு செய்வதும், துாற்றுவதும் வசை பாடுவதும் இழிசெயலாகும்.

'ஒரு நாயை அடிக்க வேண்டுமானால் அதற்கு வெறிபிடித்து விட்டது என்று சொல்லி அடி ’’

என்று ஒரு ஆங்கிலச் சொல் உண்டு. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆளும்போது அத்தகைய முறைகளைத்தான் கையாண்டார்கள். அதற்கு அவர்கள் ராஜதந்திரம் அரசியல் சூத்திரம் என்றார்கள். தேசபக்தர்களையும் தேசத்தலைவர்களையும் அவதூறு செய்து சதி வழக்குகள் வரை தொடுத்தார்கள். ஆங்கிலேய ஆட்சியின் பல நடைமுறைகளும் பல சட்ட முறைகளும் இன்னும் கூட நீடிக்கின்றன. குறிப்பாக அரசியலில் அவதூறும் ஒரு பகுதியாக உள்ளது.

அரசியல் என்பது ஆட்சியின் நீதிமுறை. அதை மக்களுக்கு

எடுத்துக் கூறி அவர்களைப் படிப்பித்து அவர்களுடைய ஜனநாயக உண்ர்வு நிலையையும் பொறுப்பு மற்றும் கடமையுணர்வுகளையும்