பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாரதியின் புதிய ஆத்திசூடி O

இங்கு காட்டிற்குச் சென்று தவம் புரிவதையும் தவம் என்னும் சொல்லில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாதாரணமாக நாம் தவம் என்பதை அவ்வாறே புரிந்து கொள்கிறோம். இராமன் காட்டிற்குச் சென்றான். ஆனால் ஏதும் செய்யாமல் தவத்தில் அமர்ந்திருக்கவில்லை, அவன் தனது மகத்தான அவதாரக் கடமையை வரலாற்றுக் கடமையை இமயம் முதல் இலங்கை வரையிலுமான பாரத ஒற்றுமையை நிறுவும் அரசியல் கடமையை

நிறைவேற்றுகிறான்.

தவத்தைப் பற்றி பாரதி தனது பாடல்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார்.

நாம் பல முயற்சிகளில் முனையும் போது, பல வேலைகளில் ஈடுபடும் போது நமக்கு பல இன்ப துன்பங்கள் ஏற்படலாம். அதற் கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ச்சியாக நமது பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். விடாப்பிடியாக முயற்சி செய்து அப்பணிகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அதுவே தவமாகும்.

'செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’ என்று பாரதி பாடுகிறார். அன்பே தவம் என்றும் அத்தவத்தைச் செய்தால் நமது முயற்சிகளில் வெற்றி பெறலாம் என்றும் பாரதி கூறுகிறார்.

'யாகத்திலே, தவவேகத்திலே - தனி யோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே பல பக்தி கொண்டார் தம் அருளினிலே உயர்நாடு’’ -- என்று பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்னும் கவிதையில் பாரதி குறிப்பிடுகிறார்.

யாகம், தவம், யோகம், முதலியவைகள் எல்லாம் பல்வேறு