பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-அ.சீனிவாசன் 117

இங்கு நைப்புடை என்று பாரதி கூறும் போது யாரையாவது வேண்டுமென்றே வலுவாக வம்புக்காக அடித்தல் என்று பொருள் கொள்ளாமல் ஒரு வேலையைச் செய்யும் போது அதை முழுமையாக நிறைவாகச் செய்து முடித்தல் வேண்டும் என்று பொருள்படும்.

தானியங்களை உரலில் போட்டுக் குத்தும் போதோ சுத்தப்படுத்த முறத்தை வைத்துப் புடைக்கும் போதோ தறி, நெசவு, நெய்யும் போதோ முழுமையாக சீராக நிறைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்று பாரதி கூறுகிறார்.

ஒரு பாம்மை அடித்தால் அரைகுறையாக அடித்து விட்டுவிடக் கூடாது அது ஆபத்தானதாகும் ஒரு துஷ்டனை அடித்தால் புத்தி வரும்படி அடிக்க வேண்டும். அதையே நன்றாக அடி, முழுமையாக ஒரு வேலையைச் செய்து முடி, என்று பொருள் படும்படி நையப்புடை என்று நகைச்சுவை ததும்ப பாரதி குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறார்.

63. நொந்தது சாகும்

சோறு நொந்து விட்டது என்றால், அது கெட்டு ப் போய்விட்டது, சாப்பிட லாயக்கற்றது என்று பொருளாகும். ஒருவர் துன்ப துயரங்களால் மனவருத்தத்துடன் இருக்கும் போது அவரிடம் ஏதாவது கேட்டால் 'நானே நொந்து போயிருக்கிறேன் என்னைத் தொந்தரவு செய்யாதே' என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் நொந்து போயிக்கிறார்கள் என்றால் கடன்பட்டு நஷ்டப்பட்டு, கஷ்டங்களுக்கு ஆளாகி வாழ்வதற்கு வழியில்லாமல் வருந்தி பல தொல்லைகளுக்கு உள்ளாகி மீளா நெருக்கடியில் துன்ப துயரப்பட்டு வீழ்ந்திருக்கிறார்கள் என்று பொருள்படும். அல்லது மீள முடியாத நோய் நொடியால் துன்பமடைந்து மனம் நொந்து போயிருக்கிறார்கள் என்று பொருளாகும்.

அதனால் அவ்வாறு நொந்து போனால் விரைவில் அழிவு ஏற்பட ஏதுவாகும் என்னும் பொருளில் நொந்தது சாகும்' என்று

பாரதி கூறுகிறார்.

W.