உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 153

அத்தகைய ஆழ்ந்த சிந்தனையை மோன நிலை என்கிறோம். அதைப் போற்றி வளர்க்க வேண்டும்.

85. மெளட்டியம்தனைக் கொல்

மெளட்டிகம் என்றால் மண்டைக்கனம், கர்வம், யாரையும் சட்டை செய்யாமல் இருத்தல் தான் தான் எல்லாவற்றிற்கும் மேலானவன் என்று மற்றவர்களை அசட்டை செய்தல் உதாசீனம் செய்தல் ஆகியவைகளாகும். மெளட்டிகமாக உள்ளவர்களும் அதிகமாகப் பேச மாட்டார்கள். மோனம் போல ஆனால் மோனத்திற்கு எதிரான குணம் படைத்தவர்கள்.

மெளட்டிகர்கள் தானும் உருப்படாமல் மற்றவர்களையும் உருப்படியாக விடமாட்டார்கள். மெளட்டியம் தனிமனிதனை அழித்துவிடும். அவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் அது

எட்டாக்கனிபோல் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.

அதனால் தான் பாரதி மெளட்டியத்தைக் கொல், அதைக்

கொன்று அழித்து விடு அதைத் தோன்ற விடாதே உன் உள்ளத்தில் அதை முளைக்க விடாதே.

தன்னகங்காரத்தையும் தலைக்கணத்தையும் கர்வத்தையும் மற்றவர்களை உதாசீனம் செய்யும் போக்குகளையும் கைவிட்டு அவைகளைத் துடைத்தெரிந்து எல்லோருடனும் நன்கு பழக வேண்டும். கலந்துரையாட வேண்டும். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

86. யவனர் போல் முயற்சி செய்

யவனர்கள் என்றால் கிரேக்கர்கள் என்று பொருள் உண்டு. பண்டைய காலத்தில் தமிழகத்திற்கும் கிரீஸ், ரோம் எகிப்து முதலிய நாடுகளுக்கும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது. கிரேக்கர்கள் நமது பழைய இலக்கியங்களில் யவனர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள்.

கிரேக்க நாடு பண்டைய நாகரிகத்தில் சிறந்த நாடு. கைத் தொழில் கல்வி முதலிய துறைகளில் சிறந்து விளங்கிய நாடு,