பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|P() - பாரதியின்-புதிய-ஆத்திசூடி-O


துளிக்கு சேதம் வiபட்டு விடும். அதுபோல நாம் செய்யும் வேலைகளில் சிக்கல்கள் இருந்தால் மிகவும் உஷாராக இருந்து. அந்த வேலையைச் சேதமில்லாமல் முடிக்க வேண்டும்.

வண்டிகளில் பாரம் ஏற்றும் போதும் இறக்கும் போதும் அந்த வேலையை லாவகமாகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சேதமோ ஆபத்தோ ஏற்பட்டு விடக்கூடும்.

ஒரு எந்திரத்தை ஒரு கார், லாரி, பஸ், ரயில் விமானம் ஆகியவற்றை ஒட்டும் போதோ அதை குறிப்பிட்ட இடங்களில் திருப்பும் போதோ, அவைகளைக் கையாளும் போதோ அவைகளை ஒட்டுவதற்கென்று சில பொது விதிமுறைகள் இருக்கின்றன. அவைகளை அனுசரிக்க வேண்டும். அதற்கு பயிற்சிகள் தேவை. அத்துடன் அப்பணிகளைச் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அல்லது சில எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்போது அப்பணியை அதற்குரிய லாவகத்துடன் செய்து முடிக்க வேண்டும்.

அலைகட லில் படகுகள், தோணிகள், கப்பல்களைக் கொண்டு செல்கிறோம் சாதாரணமான நேரங்களில் பிரச்சினை எதுவுமில்லை. ஆனால் காற்று அதிகமாக அடிக்கும் போது அலைகள் உயரமாக எழும் போதும் புயல் அடிக்கும் போது அந்த நேரங்களில் அந்த நாவாய்களை மிகவும் லாவகமாகச் செலுத்த வேண்டும்.

அதேபோல் மற்றவர்களிடம் பழகும் போது செயற்கரிய பல காரியங்கள் செய்யும் போது லாவகம் தேவைப்படுகிறது. அத்தகைய லாவகம் தானாகவே வந்து விடாது. பல்வேறு விளையாட்டுகளிலும் கூட லாவகம் தேவைப்படுகிறது. அதற்குரிய பழக்கமும் பயிற்சியும் தேவைப்படுகிறது. -

பயிற்சி என்றால் இருவகைப் பயிற்சி வேண்டியதாகிறது ஒன்று தத்துவார்த்தப் பயிற்சி. மற்றொன்று நடைமுறைப் பயிற்சி. அத்துடன் அனுபவப் பயிற்சியும் பழக்கமும் தேவைப்படுகிறது. அதனால் தான் லாவகம் பயிற்சி செய் என்று பாரதி கூறியுள்ளார்.