பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 . . . . . பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

கல்வி க்கும் உடற்பயிற்சிக்கும் உள்ளப்பயிற்சிக்கும் அறிவியல் பயிற்சிக்கும் பாரதி அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதைக் காணலாம்.

வான நூல் என்பது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது, முதலிய கிரகங்கள் அவைகளின் துணை கிரகங்கள் நட்சத்திரங்கள் அவைகளின் அசைவுகள் செயல்பாடுகள் அவைகளின் விளைவுகள் ஆகியவை பற்றி ஆய்வாகும்.

இப்போது விஞ்ஞானிகள் சந்திர மண்டலத்திற்கு சென்று T வந்துள்ளார்கள். செவ்வாய்க் - ரக த்திற்குச் செல்வதற்கான T్వ முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வான வியலுக்கு கணிதம் மிக முக்கியமான அடிப்படையாகும். கணிதத்திலும் வானவியலிலும் நமது நாட்டில் முன்பு பல சிறந்த அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பாஸ்கரன் ஆர்யபட்டன், இராமானுஜன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளை பாரத நாடு உலகுக்கு அளித்திருக்கிறது. அவர்களுடைய அரிய கண்டுபிடிப்புகளை நாம் நன்கு அறிந்து பயில வேண்டும். அவைகளை உலகறிய செய்ய வேண்டும்.

'உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஒர்ந்தளந்த பாஸ்கரன் மாட்சியும்” என்று பாரதி தனது சுயசரிதைப் பாடலில் கூறுகிறார்.

'வானையளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்”

என்று தொலை நோக்குடன் கூடிய மிக அருமையான கருத்து கொண்ட பாடலைப் பாடியுள்ளார்.

பாரதியின் அந்தக் கனவு இன்று உலகில் படிப்படியாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

கோளங்களின் அசைவுகள் அவைகளின் செயல்பாடுகள்