பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

பஞ்சபூதங்களின் சேர்மானமாகவே மனித உடம்மைப சித்தர்கள் காண்கிறார்கள். நமது உடம்பிலுள்ள ஐம்பொறிகளையும் அவைகளின் செயல்பாடுகளையும் பஞ்சபூத சக்திகளுடன் இணைத்தே நமது தத்துவஞானிகள் பேசியுள்ளார்கள்.

மனிதன் தனது அறிவின் ஆற்றலால் எவ்வாறு பஞ்சபூத சக்திகளையும் அதனுடன் இணைந்துள்ள, தொடர்புள்ள இயற்கை சக்திகளையும் ஒரளவு கட்டுப்படுத்தித் தனக்குச் சதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறானோ அது போலவே ஐம்பொறிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி நெறிமுறைப்படுத்தி அவைகளைச் சரியான வழியில் செலுத்த வேண்டும் என்பதையே பாரதி ஐம்பொறி ஆட்சி செய் எனக் கூறுகிறார்.

சித்தம் போக்கு சிவம் போக்கு என்னும் முறையில் அதனதன் இஷ்டத்திற்கு ஐம்பொறிகளின் செயல்பாடுகளை விட்டுவிடக் கூடாது. நமது மனமும் அறிவும் ஐம்பொறிகளையும் அதன் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். அதன் மூலம் நமது உடம்பின் இதர உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் நிர்வகிக்க வேண்டும். அதையே பாரதி ஐம்பொறி ஆட்சி செய் என்று கூறுகிறார். இதில் மனிதன் வெற்றி பெறும் அளவில் அவன் முழுமையான மனிதனாகிறான். அறிவும் ஆற்றலும் உறுதியும் தெளிவும் கொண்ட சிறந்த மனிதனாகிறான். அதன் மூலம் சமுதாயத்திற்கும் வழிகாட்டும் தலைமைப் பங்கினை ஆற்றுக்கூடிய சிறந்த மனிதனாகிறான். இதை நமது வருங்கால தலைமுறைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்று நமது குழந்தைகளுக்கான ஆத்திசூடியாக பாரதி இதை எடுத்துக் கூறியுள்ளார்.

10. ஒற்றுமை வலிமையாம்

நமது நாட்டில் பல சாதிகள், பல மொழிகள், பல மதங்கள், பல இனங்கள் ஆகிய வற்றால் வேறுபட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நமது நாட்டின் -உயர்ந்த பண்பாடாக அமைந்துள்ளது.