பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 39

படிக்கிறான். எழுதுகிறான் என்று கூறினாலும் மற்றவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இன்றி தனிமைப்பட்டு இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

மனிதன் ஒரு சமுதாயப் பிராணி. மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு கூட்டம் கூட்டமாகவே கூடி வாழ்ந்துள்ளான். காடுகளிலும், மலைகளிலும் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று உலகம் முழுவதுமே மிகவும் நெருங்கிவிட்ட காலம் வரை மனித வாழ்க்கை கூட்டு வாழ்க்கையேயாகும். கூட்டு வாழ்க்கை நடைபெறக் கூட்டாகவே மனிதன் வேலை செய்து வந்திருக்கிறான். தொழில் செய்து வந்திருக்கிறான்.

குடும்பம், குழுக்கள், இனக்குழுக்கள், இனக்கூட்டங்கள், ஊர், நாடு, நகரம், தேசிய இனம், தேசம், உலகம் என்னும் வகையில் கூட்டுச் சமுதாயமாகவே மனித வாழ்க்கை அமைந்து வளர்ந்து வந்திருக்கிறது, சமுதாய உழைப்பு சமுதாய உற்பத்தி சமுதாய வாழ்க்கை இதுவே மனிதகுல அமைப்பாகும்.

இன்று மனித சமுதாய அமைப்பின் அடிப்படை அங்கக்கூறு குடும்பமாகும். அதிலிருந்து இனக்குழு, இனக்கூட்டம், ஊர், நாடு, நகரம், தேசிய இனம், மொழி வழி அமைப்பு, தேசம் உலகம் வரை சமுதாயப் பிரிவுகள் சேர்ந்தும் இணைந்தும், முரண்பட்டும் மோதியும் வளர்ந்து வந்துள்ளன.

தனிமனிதனுக்கும் சரி, குடும்பம் முதல் உலகம் வரையிலுமான மனித சமுதாயப் பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகவும் கூட்டாகவும், தனிநலன்களும் பொது நலன்களும், தனித்தமைகளும் பொதுத் தன்மைகளும் இருக்கின்றன. இவைகள் தங்கள் நலன்களில் இணைய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். ஒற்றுமையில் தனித்தன்மையும் பொதுத் தன்மையும் காண் வேண்டும்.