பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( ) --- அ.சீனிவாசன் 43

-

நமது ஊரில் விவசாயம், தொழில் முதலியவைகளில் முன்னேற்றம் காண வேண்டும். நீர் நிலைகளைப் பராமரிக்க வேண்டும். மரங்ளை நட வேண்டும். இயற்கைச் சூழலை சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். தெருக்களை சாலைகளைப் பராமரிக்க வேண்டும். கல்வி நிலையங்களைப் பராமரிக் வேண்டும். ஊரில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். நமது ஊரில் சுகாதாரம், குடிநீர், வைத்திய வசதிகளைப் பராமரிக்க வேண்டும். இவ்வாறாக ஊர்மக்களின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்குமாக கூட்டு முயற்சி மூலம் கூடித்தொழில் செய்து முன்னேற வேண்டும்.

நமது வட்டாரத்தில் நமது மாவட்டத்தில், நமது மாநிலத்தில், நமது நாட்டில் இவ்வாறு மனித தேவைகள் சமுதாய தேவைகள் நிறைவுபடக் கூட்டான முறையில் திட்டமிடவும் தொழில் செய்து முன்னேற்றம் காணவும் வேண்டும் என்பது பாரதியின் வழியாகும்.

நமது நாட்டில் இப்போதெல்லாம். மத்திய அரசு அமைப்புகள் மற்றும் மாநில அரசு அமைப்புகளுக்கு இடையில் ஒத்துழைப்பும் கூட்டு முயற்சிகளும் அதிகம் தேவைப்படுகின்றன. நமது நாட்டு வளங்களைச் சீராகப் பயன்படுத்துதல், திட்டமிடுதல், போக்குவரத்து சாதனங்களை அபிவிருத்தி செய்தல், நிலநீர்ப் பங்கீடு செய்தல், நீர்ப்பாசனம், மின் உற்பத்தியை அதிகரித்தல், ஏற்றுமதி இறக்குமதி வாணிபம், உள்நாட்டு வாணிபத்தைப் பெருக்குதல், உள்நாட்டு விவசாயம், தொழில், கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், உயர்கல்வி ஆராய்ச்சி, கலை இலக்கியம் விளையாட்டு முதலிய பல்வேறு துறைகளிலும் கூட்டு முயற்சிகள் அதிகப்பட வேண்டும். அதற்கான வகையில் நாம் கூடித் தொழில் செய்வதை விரிவுப்படுத்த வேண்டும்.

இன்றைய காலத்தில் கூட்டு முயற்சிகளும் கூடித் தொழில் செயவதும் என்பது உள்நாட்டில் மட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையிலும் உலக அளவிலும் ஒத்துழைப்புகளும் அதிகப்பட வேண்டும் என்று மேலும் மேலும் அதிகமான அளவில் உணரப்படுகிறது. அந்த முயற்சிகள் நடைமுறையில் அதிகப்பட்டும் விரிவுபட்டும் வருகின்றன.