பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

மன்னராட்சி முறைகள் இருந்த காலத்தில் பல படையெடுப்புகளும், நாடுகளைப் பிடித்தலும் தங்கள் ஆட்சி எலலைகளை விரிவுப்படுத்திக் கொள்வதற்காக நடைபெற்ற பல சண்டைகளும் அதிகமாக இருந்தன. அக் காலத்தில் மக்களிடத்தில் கூடித் தொழில் செய்தல் ஒரு பக்கம் இருந்த போதிலுல், பல போர்களினாலும் ஆக்கிரமிப்புகள் படையெடுப்புகளினாலும் மதப்படுகொலைக ளாலும் அரசர்களுடைய கூத்துக்களாலும் பலத்த சேதங்களும் நாசங்களும் அதிகம் ஏற்பட்டன.

மன்னராட்சி முறைகள் மாறி தொழில் புரட்சிகளும், எந்திர வளர்ச்சிகளும் ஏற்பட்ட காலத்தில் புதிய தொழில் வளர்ச்சிகளும் பொருள் உற்பத்திப் பெருக்கமும் சமுதாய வளர்ச்சியும் நாகரிக வளர்ச்சியும் அதிகரித்தது, இருப்பினும் தனியார் முதலாளித்துவ முறையில் சுதந்திரமான வியாபாரப் போட்டியில் வாய்ப்பு அதிகமும் வலுவும் இருந்த நாடுகள். தங்கள் செல்வத்தை மட்டுமல்லாமல் ஆயுத பலத்தையும் பெருக்கிக் கொண்டு மற்ற நாடுகளை அடிமைப்படுத்திய ஏகாதிபத்திய வல்லரசுகள் தோன்றின. இதன் காரணமாக சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளாயின. பெரும்பாலான ஆசிய ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் அந்த வல்லரசுகளுக்கு அடிமை நாடுகளாகவும் சார்பு நாடுகளாவும் ஆயின, வல்லரசு நாடுகளின் கொடுமையான சுரண்டல் காரணமாக காலனி, அரைக்காலணி நாடுகள் இந்தியா போன்ற வளமான நாடுகள் கூட ஏழை நாடுகளாகி வறுமை மிஞ்சி இல்லாமையும், கல்லாமையும் அதிகரித்து பின் தங்கி விட்டன.

ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலும் போட்டியும் போர்களும் வலுத்து இந்த நூற்றாண்டில் மட்டும் முதல் பாதியில் இரு பெரும் உலகப்போர்கள் ஏற்பட்டு இதன் விளைவாக மிகப் பெரும் அளவில் ஆட்சேதங்களும் பொருட்சேதங்களும், நாசங்களும் விளைந்து உலக வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.