பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாரதியின் புதிய ஆத்திசூடி C

ஊர் அளவிலிருந்து உலக அளவில் வரையிலும் கூடித் தொழில் செய்ய வேண்டிய அவசியம் அதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்துள்ளன, மேலும் அதிகரித்து வருகின்றன.

நமது நாட்டின் வளர்ச்சிக்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் இத் துறையில் பாரதி யின் போதனை நம் மை மேலும் ஊக்குவிக்கட்டும். உலகுக்கு வழி காட்டட்டும்.

19. கெடுப்பது சோர்வு

சோர்வு நம் மைக் கெடுத்து விடும். எப்போதும் உற்சாகத்துடனும் செயல் ஊக்கத்துடனும் இருக்க வேண்டும். “நமக் குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது பாரதியின் புகழ்மிக்க வாசகங்களாகும். “துன்பம் நெருங்கிவந்த போதும் நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா” என்றும் “சோர்வுகள் போகும் - பொய்ச் சுகத்தினைத் தள்ளிச் சுகம் பெறலாகும்” என்றும் பாரதி பாடுகிறார்.

உலகம் சதா இயங்கிக் கொண்டிருக்கிறது. இயற்கை இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேருலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சி யடைந்துக் கொண்டே இருக்கின்றன. அதற்கு சோர்வில்லை. அந்த இயற்கையின் பகுதியாக உள்ள மனிதனும் சதா இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

சோர்வு நமது செயல்பாட்டைக் கெடுத்துவிடும். நாம் செய்யும் வேலைகளில் வெற்றி கிடைத்தால் நாம் உற்சாகம் அடைகிறோம். தோல்விகள் ஏற்பட்டால் சோர்வுகள் அடைகிறோம், அந்தச் சோர்வுகளால் நமது தோல்விகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஆகையால் சோர்வு கூடாது தோல்விகளைக் கண்டும் நாம் துவண்டு விடக்கூடாது.

நமக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் எல்லாமே சுகமாகவே இருந்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நமக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டால் சோர்வு ஏற்படுகிறது. அச்சோர்வு அதிகப்பட்டால்