பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் புதிய ஆத்திசூடி

ஒரு விளக்கவுரை

முதல் பதிப்பின் முன்னுரை:

மகாகவி பாllய பதிபllன் புதிய ஆத்திசூடி ஒரு தனி இலக்கியமாகும். அந்தச் சிறப்புயிர். இலக்கியத் தொகுதிக்கான காப்புச் செய்யுள் "ஆத்திசூடி இளம்பிறை .)|iml |ந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்' என்று தொடங்கி கருநிறங் கொண்டு பாற்கடல் மிசை கிடக்கும் திருமாலையும், முகமது நபிக்கு மறையருள் புரிந்த எல்லாம் வல்ல அல்லாவையும், ஏசுவின் தந்தையையும் ஒருசேர பாவித்து நல்லிணக்கத்துடன் தொடங்குகிறது.

அமரகவி பாரதியின் புதிய ஆத்திசூடியில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் கருத்துக்கள் கொண்ட அச்சம் தவிர், 'உடலினை உறுதி செய்”, ஐம்பொறி ஆசி கொள்”, “ஏறுபோல் நட', 'கூடித் தொழில் செய்”, “கைத்தொழில் போற்று', 'தெய்வம் நீ என்று உணர்”, “தேசத்தைக் காத்தல் செய்', 'தையலை உயர்வு செய்’, 'பணத்தினை பெருக்கு', 'வேதம் புதுமை செய்', 'வையத் தலைமை கொள்', போன்ற சூத்திர வரிகள் நமது நாட்டின் ஒவ்வொரு இளைஞனின் உள்ளத்திலும் எப்போதும் எல்லாக் காலத்திற்கும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய தனிச்சிறப்பு மிக்க வரிகளாகும்.

பாரதியின் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் அவரது புதிய ஆத்திசூடி வரிகளையும் படித்து எனக்கு ஒரு புதிய உணர்வும் புதிய எண்ணங்களும் ஏற்பட்டதுண்டு. இந்தப் புதிய ஆத்திசூடி வரிகள் நமது நாட்டிலுள்ள பள்ளிகள் அனைத்திலும் பாடமாகச் செல்ல வேண்டும், அவை நமது இளம் தலைமுறையினரின் உள்ளங்களில் பதிய வேண்டும் என்னும் எண்ணமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது,

நான் சென்னையில் முத்தியாலுபேட்டை மண்ணடி அருகில் பவளக்காரத் தெருவில் குடியிருந்த போது பாரதி அன்று நடந்து