பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் = 55

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் நன்கு படிக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்து கேட்க வேண்டும். படித்து, கேட்டு மனதில் கொண்டதை விட்டுவிடக் கூடாது. எடுத்த வேலையை விடாமல் செய்து முடிக்க வேண்டும்.

25. சரித்திரத் தேர்ச்சி கோள்

சரித்திரம் என்பது வரலாறு. வரலாறு மிகப்பெரியது, மிக விரிவானது. இங்கு வரலாறு என்பதை நமது நாட்டின், நமது தேசத்தின், உலகத்தின் மனிதகுலத்தின் வரலாற்றைக் குறிக்கிறோம். வரலாறு என்பது மனித சமுதாயத்தின் கடந்தகால அனுபவங்களாகும். அதைக் கற்றுத் தேர்ச்சி கொள்வது நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும். நாம் எந்தப் பிரச்சசினையை எடுத்துக் கொண்டாலும், அதை வரலாறு பூர்வமாக அணுக வேண்டும். படிக்க வேண்டும். படித்துத் தேர்ச்சி கொள்ள வேண்டும்.

வரலாற்றை எழுதும் போது வரலாற்று ஆசிரியர்கள் அவரவர்கள் கருத்துப்படி அவரவர்களுக்கு சாதகமாக ஒரு சார்பில் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள், மிகப் பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு ஆதரவாக அவர்களின் ஆட்சியைப் பெருமைப்படுத்தியும், இந்திய நாட்டின் பல வரலாற்று உண்மைகளை மறைத்தும் சிறுமைப்படுத்தியும் எழுதினார்கள். அதையொட்டிய பல வரலாற்றுக் கருத்துக்களை இந்திய அறிஞர்கள் பலரும் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஆங்கிலக்கல்வி பற்றி பாரதியார் தனது சுயசரிதைக் கவிதையில் கூறும் போது வரலாறு பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் குறிப்பிடுகிறார்.

'கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையு