பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q. அ.சீனிவாசன் 59

வரலாறு என்பது சென்ற கால நிகழ்ச்சிகளின் தொகுப்பேயாகும் என்னும் கருத்தும் நிலவுகிறது நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்பதில் உண்மை உள்ளது என்றால் அவை உயிரற்ற குப்பை குவியல்கள் அல்ல, அந்த நிகழ்ச்சிகளைத் தொகுப்பதிலும் வரிசைப்படுத்துவதிலும் பல குறைபாடுகளும், சார்புநிலை கொண்டு பல உண்மைகள் மறைக்கப்படுவதையும் அந்தக் கொர்வையில் நாம் காண்கிறோம்.

என்றாலும், இந்தத் தொகுப்புகள் மூலம் முந்திய காலத்தைப் பற்றிய பல விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

அவ்விவரங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த கால நிகழ்ச்சிகளை முழுமையாகச் சேகரித்து, அவைகளின் உயிர்ோட்டமான இணைப்பையும் தொடர்ச்சியையும், அதில் மக்களுடைய உரிய பங்கையும் பாத்திரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

'நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்.”

என்று பாரதி கூறும் வரிகளில் உயிரோட்டமாக உள்ள கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதில் தாய் என்பது பாரத மக்களாகும். நல்ல ஆட்சியாளர்கள் என்றால், அவர்களை வாழ்த் துவது அல்லவராயின், அவர்களை விழுங்கிக் கூத்தாடுவதும் பாரத மக்களின் உயிரோட்டமான வரலாற்றுச் சாதனையாகும். மக்களின் அத்தகைய சாதனைகளை அடையாளம் கண்டு, அவைகளை நமது நீண்ட வரலாற்றின் விவரமாக அறிய வேண்டும்.

இன்றைய செய்திகளே நாளைய வரலாறு என்று ஒரு கருத்துகூறப்படுகிறது. இதுவும் நிகழ்ச்சிகளின் தொகுப்பைப் போன்றதேயாகும். இன்றைய செய்திகள் எவ்வாறு வெளியிடப்படுகின்றன என்பதைப் பொருத்து வரலாற்று