பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

அமைப்புகளை உருவாக்குகிறோம் அவைகளைச் செய்யும் போது நமக்குப் பல கஷ்டங்களும் இடையூறுகளும் தொல்லைகளும் ஏற்படலாம், அதைக் கண்டு மனம் கலங்கக் கூடாது, மனம் உடைந்துவிடக் கூடாது.

அதைத் தான் சிதையா நெஞ்சு கொள் என்று பாரதி கூறுகிறார்.

28. சீறுவோர் சீறு

சீறுவோர் சீறு என்று கூறும் போது மற்றவர்களைக் காரணமில்லாமல் சீறக்கூடாது.

சமுதாயத்தில் சில கொடுமைக்காரர்கள் இருக்கிறார்கள். ஆட்சியில் சில கொடுங்கோலர்கள் இருக்கிறார்கள். பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் சிலர் அவர்கள் மற்றவர்கள் மீது வீண் கோபம் கொண்டு சீறுகிறார்கள். சிறுமைப்படுத்துகிறார்கள். அதைக் கண்டு நாம் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் ஆணவத்துடன் சீறினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முறையில் நாம் பதிலுக்கு சீற வேண்டும் என்பது பாரதியின் கொள்கையாகும்.

29. சுமையினுக்கு இளைத்திடேல்

இங்கு சுமை என்பது பொறுப்புகளாகும். பொறுப்புகளைச் சுமப்பது சுமையாகாது. அது கடமையாகும். நாம் மனிதனாகப் பிறந்தவுடனேயே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நமக்கு சில பொறுப்புகள் கடமைகள் ஏற்படுகின்றன. அந்தப் பொறுப்புகளையும் கடமைகளையும் நாம் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் அதில் அரைகுறை இருக்கக்கூடாது.

நமக்கு குடும்பப் பொறுப்புகள் சுமைகள் ஏற்படுகின்றன. நமக்கு சமுதாயத்தின்பால் சில பொறுப்புகளும் கடமைகளும் ஏற்படுகின்றன. நமக்கு நாட்டின் பால் சில பொறுப்புகளும், கடமைகளும் ஏற்படுகின்றன. அந்தச் சுமைகளை நாம் ஏற்க வேண்டும்.