பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-O

இவ்வாறு நாம் தொழில் செய்யும் போது தேனிக்களைப் போல் மலர் வண்டுகளைப் போல் இன்புற்று மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் பாரதி போதிக்கிறார்.

40. ஞெகிழ்வதருளின்

ஞெகிழ்வது என்பது மனம் இளகுதல் உருகுதல், மலர்தல் என்று பொருளாகும். இளகிய மனம் இருப்பது ஒரு சிறந்த பண்பாடாகும். அதை நமது குழந்தைகளிடமும் இளைய தலைமுறையினரிடமும் வளர்க்க வேண்டும்.

ஒருவர் துன்ப துயரத்தில் இன்னலுறும் போது அவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்ய வேண்டும். அதையே எளிமை கண்டு இரங்கு வாய் வா வா என்று பாரதி அழைக்கிறார்.

பாரதி இளகிய மனம் கொண்டவர். ஒருநாள் அவரது வீட்டில் சாப்பாட்டுக்கு அரிசி இல்லை. அவருடைய துணைவியார் அடுத்த வீட்டில் கொஞ்சம் கடனாக அரிசி வாங்கிக் கொண்டு வந்து அதைத் தட்டில் வைத்திருந்தார். அந்த அரிசியை எடுத்து பாரதி குருவிகளுக்குப் போட்டு ஆனந்த மடைந்தார் என்று ஒரு நிகழ்ச்சி உண்டு.

அவருடைய மன நெகிழ்ச்சிக்கு அவருடைய சுதந்திரப்பயிர் என்னும் பாடல் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

'தன்னர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணிர்ால் காத்தோம் கருகத்திருவுளமோ?

என்றும்

"ஒராயிரம் வருடம் ஒய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

என்றும்

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால் என் பொருட்டு நீதான் இரங்காதிருப்பதுவோ?