பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப் பட்டினியால் கோர மரண மெய்தும்படியாகவும் நேர்ந் திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு கூடிணம்கூடச் சகித் திருப்பது நியாயமில்லை என்பது சொல்லாமலே போதரும். எனவே, உலகத் துன்பங்கள் அனைத்திலும் கொடி தான இந்த ஏழ்மைத் துன்பத்தை ஸமாதான நெறியாலும் மாற்றக்கூடிய உபாயமொன்றை நாம் கண்டுபிடித்து நடத்துவோமானல், அதினின்றும் நமது நாடு பயனுறுவது மட்டுமேயன்றி, உலகத்தாரெல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மையடைவார்கள். "அப்படிப்பட்ட உபாயமொன்று கிடைக்குமா? என்ப தைப் பற்றி இங்கே ஆராய்ச்சி செய்வோம். ஜனங்களுக்குள்ளே க ல க ங் க ளு ம் யுத்தங்களும் கொலைச் செயல்களும் நேரிடாத வண்ணம் ஸமாதான நெறியிலே உலகத்தின் ஏழ்மையைத் தொலைப்பதற்குத் தகுந்த உபாயமாக எனக்குத் தோன்றுவதை இங்கு தெரிவிக்கிறேன். உலகம் தேசங்களால் அமைக்கப்பட்டது. தேசம் மாகாணங்களின் தொகுதியாம். மாகாணங்கள் ஜில்லாக் களின் சேர்க்கையாகும். ஜில்லா, ஒரு சில நகரங்களும் பெரும்பான்மை கிராமங்களும் கூடிய தொகுதியாகும். எனவே, ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுமையே இல்லாமல் செய்வதற்குரிய வழி கண்டுபிடிப் போமாயின், பிறகு அந்த உபாயமே பூமண்டலத்தின் வறுமையைத் தொலைப்பதற்குப் பொருந்தியதாய் விடு மென்பது சொல்லாமலே விளங்கும். திருஷ்டாந்தமாக நான் இப்பொழுது வாசம் புரிந்து வரும் கடையம் கிராமத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வூரைச் சூழ்ந்