பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I00 கைப்பற்றிக் கொள்ளலாம். ஒரு சிறிதேனும் உடமை யில்லாதவர்கள் மலைக்குறவர் இடையேகூடக் காணப்படுவ தில்லை. பூஸ்திதி மாத்திரம்தான உடைமை? துணி, மணி : வீடு, பாத்திரம், பண்டம், பாய், தலையணி-எல்லாம் உடைமைகளே. மலைப் பழிஞர் நாட்டுக்குள் பிரவேசித்து உங்களுடைய வீடு பாத்திரங்களெல்லாம் அபகரித்துக் கொள்ளுதல் நியாயமென்று உங்களுக்குத் தோன்று கின்றதா? 'எனவே, எங்களுடைய பூஸ்திதிகளை நீங்கள் பலாத் காரமாகப் பறித்துக் கொள்ளுதல் நியாயமன்று. ஆனலும் பூமித்தாய் எல்லாருக்கும் பொதுவாகத் தரும் விளை பொருள்களை நாங்கள் சிலபேர் மாத்திரம் பங்கிட் டெடுத்துக் கொண்டு, உங்களுக்கு எங்களுடைய தயவு இருந்தால்தான் ஆகாரம். எங்கள் தயவில்லாவிட்டால் பட்டினி' என்ற நிலையில் உங்களை வைத்து, அதனின்று உங்களை அடிமைகளாக்கி நடத்திவரும் மஹாபாவத்திற்கு இன்னும் ஆளாயிருக்க எங்களுக்குச் சம்மதமில்லை. 'இன்றும் வருவது கொல்லோ நெரு நலுங் கொன்றது போலும் நிரப்பு' என்று திருவள்ளுவர் சொல்லியது போல, (அதாவது, நேற்று முழுதும் நம்மைக் கொலை செய்வது போலவே வருத்திக் கொண்டிருந்த வறுமை இன்றைக்கு வந்து விடுமோ என்று) பரிதபித்து ஏங்கும் நிலைமையில் நீங்கள் உயிர் வாழ்க்கை நடத்திவருகிறீர்கள். உங்களை இந்த உணவு நிச்சயமில்லாத நிலையில் வைத் திருக்கும் பாவத்தை இனிச் சுமந்து கொண்டிருப்பதில் எங்களுக்குச் சம்மதமில்லை. எனவே, உங்களில் ஆண் பெண் குழந்தை எவருக்கும் என்றைக்கும் ஆகாரவிஷய மாக பயமில்லாத படி செய்துவிடவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிருேம், அதற்கு, பின்வரும் வழியை அனுசரிக்க வேண்டும் என்று நிச்சயித்து இருக்