பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சீனவிலே பிரதி கிதியாட்சி முறைமை செப்டம்பர் 8, 1906 சீன தேசமானது இந்தியாவைக் காட்டிலும் ஜனத் தொகையிலே பெரியது; இந்தியாவைப்போலவே மஹா புராதனமான நாகரீகம் உடையது என்ற போதிலும், கால அளவில் அது சிறிது சிறிதாக நாகரீகக்குறை வடைந்து போய் நவீன நாகரீகம் பெற்ற மேற்கு தேசத்தார்களால் சிறிதேனும் மதிக்கப் பெருத நிலைக்கு வந்துவிட்டது. ஆனல், ஜப்பான் மேல் திசையாருக்குப் பாடம் கற் பித்துத் கொடுத்த பிறகு கிழக்குத் திசை நாடுகள் எல்லா வற்றிற்கும் புதிய உயிர் பிறந்திருக்கிற தல்லவா? மேலும், சீன இந்தியாவைப்போல பராதீனப்பட்ட நாடில்லை. சுயாதீன சம்பத்துடையது. ஆதலால், அது எளிதில் அபிவி ருத்தி பெறுவதைத் தடுக்க எதிரிகள் அதிகமாகவில்லை. எனவே, சீன ஜப்பனுடைய திருஷ்டாந்தத்தால் உற்சாகம் பெற்றுத்தான் நாகரீகமடைந்து உலகத்து ஜாதியாருக்கு குள்ளே உன்னத நிலைமையடைவதற்கு மிகவும் ஆவலுடன் பிரயத்தனங்கள் செய்து வருகிறது. (1) சேனைகள் நவீன முறைப்படி தயார் செய்யப் படுகின்றன. (2) இளைஞர் அன்னிய தேசங்களுக்கு ராஜாங்கச் செலவில் அனுப்பப்பெற்று அன்னிய கைத்தொழில் முறைகள், நாகரீக புதுமைகள், சாஸ்த்ராபிவிருத்திகள் என்பனவற்றை பெற்றுத் திரும்புகிருர்கள். (3) மேற்கூறியவர்களுக்கே நாட்டில் உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்படுகின்றன. (4) பெண்கல்வி அபிவிருத்தியின் பொருட்டாகச் செய்யும் முயற்சிக்கு அளவில்லை.