பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 ஏற்பட்டாலும் பெரிதில்லை; நாட்டை அன்னியர் கொண்டு போனலும் போகுக; ஆனல் தேசீயக் ககதியார் ஆளக் கூடாது. இங்ங்ணம் கருதும் மனிதர் செய்துகொண்ட உடம்பாடு எப்படி யிருக்கும்! மேலும், லண்டன் நகரத்தில் பால்கன் தேசத்தார்களுக்கும் துருக்கிக்கும் உடம்பாடு கையெழுத்திடப்பட்டது. அதில், மற்ற நிபந்தனைகளுடன், அட்ரியாநோபிள் ஜில்லாவைத் துருக்கி விட்டுவிட வேண்டு மென்ற நிபந்தனையும் சேர்ந்திருந்தது. அக்காலத்தில், அன்வர்பாஷா முதலிய தேசீயக் ககதித் தலைவர்கள் துணி வாகவும் தைரியமாகவும் வேலை செய்தபடியால் துருக்கிக்கு அட்ரியா நோபிள் நஷ்டமாகாமல் மிஞ்சிற்று. திடீரென்று அன்வர்பாஷா முன்னிருந்த கோழை மந்திரிகளைத் துரக்கி எறிந்துவிட்டு, அதிகாரத்தைக் கைவசப் படுத்திக்கொண்டு, அட்ரியா நோபிளே இழக்கப் போவதில்லை யென்று தெரிவித்துவிட்டார். இதற்குள், பால்கன் தேசங்கள் ஒன்றுக்கொன்று போராடத் தொடங்கித் தங்கள் மனஸ் தாபங்களைத் தீர்ப்பதற்குப் பிறர் மத்யஸ்தத்தை வேண்டக் கூடிய நிலைமைக்கு வந்துவிட்டபடியால் அவற்ருல் துருக்கியை வற்புறுத்த முடியவில்லை. ஆனல், “லண்டன் உடம்பாட்டை நாங்களன்ருே கூட இருந்து முடித்து வைத்தோம்? அப்படியிருக்க அவ்வுடம்பாட்டுக்கு மாருக அட்ரியா நோபிள் துருக்கி வசத்திலிருப்பதை நாங்கள் அங்கீகாரம் செய்யமாட்டோம்” என்று ஆங்கில மந்திரிகள் சொன்னர்கள். அதற்கு அன்பர்பாஷா :- 'தங்கள் இஷ்டப்படி என்ன வேண்டுமானலும் செய்து கொள்ள லாம். ஆனால் அட்ரியா நோபிளேக் கொடுக்கமாட்டேன்' என்று சொல்லிவிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. துருக்கிக்கு அட்ரியா நோபிள் மிஞ்சிற்று. அதுபோல் இப்போது ஆசியா மைனரிலுள்ள அனடோலியாவின் ராஜதானியாகிய அங்கோரா நகரத்தில் கமால்பாஷா