பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 பார்லிமெண்ட் வைத்து இங்கிலீஸ் ஒற்றுமையை அதிகப் படுத்தலாமென்ற யோசனையை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் அங்கீகாரம் செய்வாரா? ஐரிஷ் சுங்கத் தீர்வையும் வருமான வரியும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டாரின் ஆதிக் கத்தின் கீழேதான் வைத்துக்கொள்ளப் போகிரு.ர்களாம். அதுவும் இன்றியமையாததுதானென்பதற்கு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஏதேதோ நொண்டி முகாந்தரம் சொல்லு கிரு.ர். இந்தக் கொள்கைகளுடனே இவர்கள் செய்யப் போகிற ஸ்வராஜ்யச் சட்டத்தை ஐர்லாந்துவாஸிகள் தடி முனையாலேகூடத் தீண்டமாட்டார்கள். இதை ஐர்லாந்தில் யாரும்சிறிதேனும் அங்கீகாரம் செய்துகொள்ள மாட்டார் களென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தாமே அங்கீகரிக் கிருர். அங்ங்ணம் அவர் அங்கீகாரம் புரிந்தும், அவரும் அவருடைய கூட்டத்தாரும் பார்லிமெண்டில் ஸ்வராஜ்ய மசோதா வொன்றைக் கொண்டு விட்டுக்கொண்டு, முதல் வாதம், இரண்டாம் வாதம் முதலிய விளையாட்டுக்களில் ஏன் வீணுக நேரத்தைச் செலவிடுகிருர்களென்ற விஷயம் எனக்கர்த்தமாகவில்லை. ஒரு வேளை ஒரு நிஷ்ப்ரயோஜனச் சட்டத்தை மிகவும் படாடோபங்களுடன் செய்து முடித்துக் கையில் வைத்துக்கொண்டே- 'நாங்களென்ன சய்வோம்? ஐர்லாந்துக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கப் போனேம். அவர்கள் வாங்கிக்கொள்ள மறுக்கிருர்கள். எனவே, எங்கள் பொறுப்புக் கழிந்தது' என்று சொல்லித் தங்கள் மனஸாrவிக்கும் அமெரிக்கர் முதலியவர்களின் கூக்குரலுக்கும் ஒரு கழிப்புக் கழித்துவிடலாமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜும் அவருடைய நண்பர்களும் நினைப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், இங்ங்ணம் நாடகம் காட்டுவதிலிருந்து ஜர்லாந்து வாஸிகள் ஸமாதான மெய்த மாட்டார்களென்