பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வல்லமை தாராயோ?-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே (நல்லதோர் வீணை) என்றும், பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் (காணி நிலம்) என்றும் கனிந்துருகிப் பாடுகின்ருர். பாரதியார் திருமகளைப் போற்றுகின்ருர். செல்வம் எல்லாம் அருளும்படி வேண்டுகின்ருர். எதற்காக? தம்முடைய நலத்துக்காகவா? தாம் வாழ்வதோடு, இல்லையென்ற கொடுமை-உலகில் இல்லையாக வைப்பேன் (திருவேட்கை) என்கிரு.ர். மனித இனத்தை மட்டும் பாரதியார் சிந்தையிற் கொண்டிருக்கவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல் லாம் வாடினேன் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்ச் சியைப் பறை சாற்றிய அருட்ஜோதி இராமலிங்க வள்ள லாரைப் போல பாரதியாருடைய உள்ளம் எல்லா உயிரினங் களின் மேலும் அன்பு கொள்ளுகின்றது. இந்த உணர்வு மேலோங்கிய போதுதான், மண்மீதுள்ள மக்கள், பறவைகள் விலங்குகள், பூச்சிகள், புல்பூண்டு, மரங்கள் யாவுமென் வினையால் இடும்பை தீர்க்தே இன்பமுற் றன்புடன் இணந்து வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா! என்று புதுவை மணக்குள விநாயகர் நான்மணி மாலையிலே பாடுகிரு.ர்.