பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 போக்கை ஒட்டியே இந்தியாவின் போக்கும் அமைய வேண்டி வரும் என்ற உண்மையை அக் காலத்திலேயே பாரதியார் தமது தொலை நோக்கால் உணர்கின்ருர். 1921ஆம் ஆண்டு செப்டம்பரோடு பாரதியாரின் பேன ஒய்வு பெற்று விடுகிறது, அதற்குப் பின்னல் 1921 டிசம்பரி லும் 1922 ஆம் ஆண்டு ஜனவரியிலும்தான் சத்யாக்ரஹ இயக்கம்:நேருக்கு நேர் அந்நிய ஆட்சியோடு மோதி சுமார் முப்பதியிைரம் பேர் சிறை சென்ருர்கள். 1922 இன் தொடக்க காலத்திலேயே செளரி செளரா வன்முறை நிகழ்ந்து விட்டதால் காந்தி அடிகள் யாரும் எதிர் பார்க் காத வகையில் இயக்கத்தை நிறுத்தி விடுகிரு.ர். இந்த இயக்கத்திற்கு ஆயத்தம் செய்யப் பல மாதங் களாகி இருக்கலாம். அப்பொழுதுதான் 1920இல் அஹிம் சைக் கொள்கையின் சிறப்பைப்பற்றி காந்திஜி தமது புகழ் பெற்ற விளக்கக் கட்டுரையை எழுதுகின்ருர்: 'கோழைத்தனமா ஹிம்சையா இவற்றில் எது மேலா னது என்று கேட்டாலும், இவற்றில் எதை மேற்கொள்ள லாம் என்று வினவினலும் ஹிம்சையே மேல் என்று கூறுவேன். தனது தன் மாத்னதை இழந்து கோழை போல நடந்து கொள்வதைக் காட்டிலும் போர்க் கருவி கொண்டு தமது மானத்தை இந்தியா காப்பாற்றிக் கொள்ளுவதே சிறந்தது என்று நான் விரும்புவேன். ஆனல் அஹிம்சை வழி ஹிம்சை வழியை விட மிக உன்னதமானது என்று நான் நம்புகிறேன். தண்டனையை விட மன்னிப்புத்தான் ஆண்மையின் இலக்கணம்.... உடம்பின் வலிமையால் மட்டும் சக்தி பிறப்பதில்லை. மன உறுதியாலேயே அள வற்ற சக்தி பிறக்கின்றது.....பண்பட்ட மக்களின் வழியே அஹிம்சையாகும். விலங்குகளுக்கும் கடைப்பட்ட மனித