பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 னுக்கே ஹிம்சையின் வழி ஏற்றது. அவன் மிருக பலத் தையே நம்பி வாழ்கிருன். நயத்தக்க நாகரிகம் அடைந்தவர்கள் இதைவிட உயர்ந்த நெறியைப் பின்பற்ற வேண்டும். இவர்கள் ஆன் மாவின் சக்தியைக் கடைப்பிடிக்க வேண்டும், அஹிம்சை வழியைக் கண்டு பிடித்த ரிஷிகள் நியூட்டனைவிட உயர்ந்த மேதைகள்.' என்று இவ்வாறு காந்தியடிகள் தமது அஹிம்சைக் கொள்கையை விளக்குவதை பாரதியார் தமது நுட்பமான கவிதை உள்ளத்தால் முன்பே கண்டு 'வாழ்க நீ எம்மான்' என்ற பாடலைப்பாடியிருக்கிரு.ர். தன்னுயிர் போலே தனக்கழிவெண்னும் பிறனுயிர் தன்னையும் கணித்தல் மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணர்தல், இன்ன மெய்ஞ் ஞானத் துணிவினை மற்ருங்கு இழிபடு போர், கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனில் பிணத் திடத் துணிந்தனை பெருமான்! இவ்வாறு பாரதியார் பாடுகின்ருர். விடுதலை இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் மேலும் மேலும் வலுப் பெற்ற காலத்தில் பாரதியார் வாழ்ந்திருந்தால் அவருடைய அரசியல் கொள்கை மேலும் தெளிவடைந்திருக்கும்; அதே சமயத்தில் அந்த இயக்கத்திற்கு வலிமை ஊட்டும்வகையில் பல பாடல்களை இயற்றி இருப்பார் என்று நம்பலாம். .ே த சி ய காங் கி ர ஸி ன் மாநாடுகள் ஒவ்வோர் ஆண்டிலும் இந்தியாவின் பல பாகங்களிலே நடைபெற் நதைப் பலரும் அறிவார்கள். ஒவ்வோர் மாநாடும் முன் னடந்ததை விஞ்சும் படியாக அமைந்தன. ஜவாஹர்லால்