பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வந்தே மாதரம். இதுவே உ யி ரி ன் ஒலி. ஹிந்துஸ்தானத்தை வணங்குகிறேன். ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன். இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம் ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பிய ருக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம் கற்றுக்கொண்டு பிறகுதான் அவர் களுக்கு நாம் உபாத்யாயராகலாம். ஐரோப்பாவின் தொழில் நுட்பங்களை நாம் பயிற்சி செய்தல் எளிதென்பது பூரீமான் வஸ்வின் சரிதையிலே நன்கு விளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோ, பியர் தெரிந்து கொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய் நன்மையோ மிக மிகப் பெரியது. பூரீமான் ஜகதீச சந்திர வஸ்" சொல்லுகிருர் :"தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரீகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்ப தாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்ருெரு தர்மம் வேண்டும்; அதாவது, நம் முடைய ஹிந்து தர்மம். ஏனென்ருல், 'ஆத்ம த்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினல் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப் பதால் விளையும்' என்கிரு.ர். முன்னொரு முறை சில வருஷங்களின் முன்பு ஜகதீச சந்திரர் சொல்லிய வாக்கிய மொன்றையும் இங்கு மொழி பெயர்த்துக் காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில்