பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 என்று திருவள்ளுவர் சொல்லியபடி இஃதேஸ்வாமி அத்பு தா நந்தருடைய கருத்தாகும். இதை நான் பரிபூரணமாக அங்கீகாரம் செய்து கொள்கிறேன். ஆனல் நமது ஆசையை இவ்வளவுடன் நிறுத்தி விடலாகாது. லெளகிக விஷயங்களிலும் நமது உதவியை உலகம் வேண்டித்தான் நிற்கிறது. இதை நாம் மறந்து விடலாகாது. நமது முன்னேர் பாரமார்த்திகச் செய்திகளில் மாத்திரமே நிகரற்ற மேன்மை யடைந்திருந்ததாக நினைத்து விடலா காது. இஹலோக அறிவிலும் ஆச்சரியமான உயர்வு பெற்றிருந்தார்கள்: பல தேசங்களையும், அவற்றின் பலவித சாஸ்திரங்களையும், நன்முக அறிந்த எனது நண்பரொருவர் ஐரோப்பாவில் மஹாகீர்த்தி பெற்றிருக்கும் யவனத்துச் (கிரேக்க தேசத்துச்) சிற்பத்தைக் காட்டிலும் நமது புராதன சிற்பம் மேம்பட்ட தென்று கருதுகிருர். இதை வெளியுலகத்தாருக்கும் விளங்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன், ரீஆனந்த குமாரஸாமி முதலியவித்வான் கள் மிகவும் உழைத்து வருகிருர்கள். ஆனல் இதை இங்கு நமது தமிழ் நாட்டிலே வாழும் ஜனங்களுக்கு விளங்கக் காட்டுவார் யாரையும் காணவில்லை. பலதேசத்து ஸங்கீதங்களையும் நான் ஒருவாறு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். நமது புராதன ஸங்கீதத்துக்கு நிகரா னது இவ்வுலகத்தில் வேறெங்குமில்லை என்பது என்னு டைய முடிபு. கவிதை விஷயத்திலும் இப்படியே. இனி கணிதம், ரஸாயனம் முதலிய வேறு பல சாஸ்தி ரங்களும் நமது தேசத்திலேதான் முதலில் வளர்ச்சி பெற்றவையாகும். நாம் இஹலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்