பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அன்பும், ஆதரவும், ஸந்துஷ்டியும், பக்தியும் செலுத்து வான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியாயிருப்பான். இங்ங்ணம் மாருத சந்தோஷ நிலையே முக்தி நிலை என்றும் அமரபதமென்றும் கூறப்படுவது. இதனை மனிதன் அப்யாஸத்தாலும் நம்பிக் கையாலும் இந்த உலகத்தில் எய்திவிட முடியும். அஃதே வேத ரஹஸ்யம். இந்த ஆத்ம ஐக்யமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பாவுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்த்ர கவிச்சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ங்னம் அற்புத வழிபாடு செலுத்தியது. -பாரதி தமிழ். 24. செல்வம்-1 28 நவம்பர் 1917 ருஷ்யாவில் சோஷலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக் கூடுமென்று தோன்றுகிறது. சோஷலிஸ்ட் கட்சியென்பதைத் தமிழில் ஸ்மத்துவக்கட்சி என்று சொல்லலாம். அதுகூட சரியான மொழிபெயர்ப்பாகாது. சொத்து விபாகம் செய்திருப்பதில் இப்போது சிலர் செல்வரென்றும் பலர் ஏழைகளென்றும் ஏற்பட்டிருப்பதை மாற்றி உலகத்திலுள்ள சொத்தை அதாவது பூமியை உலகத்து ஜனங்களுக்கு ஸ்மமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், தொழில் விஷயத் தில் இப்போது போட்டிமுறை இருப்பதை மாற்றிக் கூடி யுழைக்கும் முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மேற்படி கட்சியாருடைய முக்கியமான கோட்பாடு. ஆதலால் இந்தக் கட்சிக்கு ஐக்கியக்கட்சி