பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிரு.ர்கள். இந்த முயற்சி இன்னும் அதிக பலம் அடையும். நாளுக்கு நாள் இந்த முயற்சியில் சக்தியும் வேகமும் அதிகரித்து வருகின் றன. இதனினும் இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் அந்த முறையைக் கைப்பற்றி நடக்கும். இந்தியா, ஜப்பான் முதலிய தேசங் களிலும் படிப்புத் தெரியாதவர் ஒருவர்கூட இல்லாமற் போய்விடுவார்கள் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஜாதி பேதங்கள் இந்தியாவிலேயே சிதறுண்டு வருகின்றன வெனில் மற்ற நாடுகளைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. இதுபோலவே, செல்வத்தைக் குறித்த வேற்றுமை களையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும் உலகத்தில் மிகத்தீவிரமாகப் பரவிவரு கிறது. ஐரோப்பாவிலேதான் இந்த முயற்சி வெகு மும்முர மாக நடந்து வருகின்றது. ஒரு தேசத்தில் பிறந்த மக்கள் அனைவருக்கும் அந்த தேசத்தின் இயற்கைச் செல்வ முழு வதையும் பொது உடமையாக்கி விடவேண்டு மென்ற கொள்கைக்கு இங்கீலீஷில் 'சோஷலிஸ்ட்' கொள்கை யென்றுபெயர். அதாவது 'கூட்டுறவுக் கொள்கை. இந்தக் "கூட்டுறவு வாழ்வு'க் கொள்கை (சோஷலிஸ்ட்) ஐரோப் பாவில் தோன்றியபோது இதை அங்கு முதலாளிகளும் மற்றபடி பொது ஜனங்களும் மிக ஆத்திரத்துடனும், ஆக்ரஹத்துடனும் எதிர்த்து வந்தார்கள். நாளடைவில் இக் கொள்கையின் நல்லியல்பு அந்தக் கண்டத்தாருக்கு மேன்மேலும் தெளிவுபட்டு வரலாயிற்று. எனவே, இதன் மீது ஜனங்கள் கொண்டிருக்கும் விரோதமும் குறைவுபட்டுக் கொண்டுவரவே, இக்கொள்கை மேன்மேலும் பல மடைந்து வருகிறது. ஏற்கெனவே, ருஷ்யாவில் ரீமான் லெனின், பூரீமான் மின்த்ரோத்ஸ்கி முதலியவர்களின் அதி காரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை