பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கண்ணன் எனது சற்குரு! (குறிப்பு : அறிவாகிய சுடர் ஒன்று இருக்கிறது. அதன் ஆடல்தான் உலகம் என்பதை ஓர் அழகிய கவிதையில் விளக்குகிருர் பாரதியார்.) சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு சங்கையில் லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில் மாத்திரம் எந்த வகையிலும் - சக மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும் ஆத்திரம் நின்ற திதனிடை - நித்தம் ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. I நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல நாட்கள் அலைந்திடும் போதினில், நிறைந் தோடும் யமுனைக் கரையிலே - தடி ஊன்றிச் சென்ருரோர் கிழவனர்: . ஒளி கூடு முகமும், தெளிவுதான் - குடி கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத் தாடியும் கண்டு வணங்கியே - பல சங்கதி பேசி வருகையில். 2 என்னுளத் தாசை யறிந்தவர் - மிக இன்புற் றுரைத்திட லாயினர் - 'தம்பி, நின்னுளத் திற்குத் தகுந்தவன். - சுடர் நித்திய மோனத் திருப்பவன், . உயர்