பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தேசமுத்துமாரியின் பேரில் ஒரு பாட்டியற்றிக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டபோது, பாரதியார் உற்சாகத்தோடு. சம்மதிக்கிருர். உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி என்று பாரதியார் எழுதியிருப்பதும் புகழ் பெற்ற பாடல்தான். இவற்றில் எது பாரதியார் இயற்றியது என்பது நிச்சயமாகத் தெரியாது. நம்பினர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு: அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்று இவ்வாறு அழகிய கருத்துக்களைக் கொண்டது தேசமுத்துமாரி என்னும் பாடல்.) தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந் தருவாய். I பாடியுனைச் சரணடைந்தேன் பாச மெல்லாங் களைவாய் கோடி நலஞ் செய்திடுவாய், குறைக ளெல்லாந் தீர்ப்பாய். 2 எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி; ஒப்பியுன தேவல் செய்வேன் உன தருளால் வாழ்வேன். 3. சக்தி யென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி, பக்தியுடன் போற்றி நின்ருல் பய மனைத்துந் தீரும், 4