பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 மழைபொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான் வானி ருண்டு கரும்புயல் கூடியே இழையு மின்னல் சரேலென்று பாயவும், ஈரவாடை இரைந்தொலி செய்யவும் உழைய லாம்இடையி ன்றியில் வானநீர் ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால், 'மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண் வாழ்க தாய்!” என்று பாடுமென் வாணியே. 4 சொல்லினுக்கெளி தாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்; அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார், கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால், கால வெள்ளத் திலேநிலை காணுங்கால். புல்லி னில்வயி ரப்படை காணுங்கால், பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! &; 52. பராசக்தி (குறிப்பு : சக்தி, சக்தி விளக்கம், சக்திக்கு ஆதிம சமர்ப்பணம், சக்தி திருப்புகழ், சிவசக்திபுகழ், மஹாக்திஇப் பாடல்கள் எல்லாம் .பக்தி மேலீட்டால் பாடப்படுவன ஆ. கு ம். இது ஒவ்வொருவருடைய அனுபவத்திலும் வருவதுதான். பாரதியார் எவ்வாறு தமது இஷ்டதெய்வமாகிய பராசக்தியை ஒவ்வொரு உறுப்பாக சமர்ப்பணம் செய்கின்ருர் என்பது கவனிக்கத்தக்கது. இது ஒர் ஆழ்ந்த பக்திநிலையைக் குறிப்பதாகும். ரீராமகிருஷ்ண பரமஹம்சர், அருட்சோதி இராமலிங்க வள்ளலாரி என்ற மஹான்களின் வாக்குகளை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புலனாகும்.)