பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சாதனைகள் யாவினையும் கூடும் - கையைச் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும். கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சக்தி வழியினை அது காணும் - கண்ணைச் சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சத்தியமும் நல்லருளும் பூணும். செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்திசொலும் மொழியது கேட்கும் - செவி சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி திருப் பாடலினே வேட்கும். வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்தி புகழினையது முழங்கும் - வாய் சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சக்திநெறி யாவினையும் வழங்கும். சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதைச் சக்தி தனக்கே கருவி யாக்கு - சிவ சக்தி திருச் சுவையினை நுகரும் - சிவ சக்தி தனக்கே எமது நாக்கு . மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்திதருந் திறனதி லேறும் - மெய்யைச் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சாதலற்ற வழியினைத் தேறும்