பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14] சதை" யாக இருக்கும் கஷ்டங்களைத் துாரத்திலிருந்து 'எலும்புள்ள கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப் படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ங்னம் அவதிப்பட்டதில்லையா? 2. மஹாலக்ஷ்மி (குறிப்பு : இல்லறம் பெரிதா ? துறவறம் பெரிதா ? என்பதை பாரதியார் சுவையாக ஒரு கதையின்மூலம் விளக்குகிரு.ரி. இரண்டும் ஒன்று தான் என்பது பாரதியார் முடிவு. துறவறத் தையே பெரிதாக மதிப்பது பாரதியாருக்கு சம்மதமில்லை என்பது கவனத்திற்குரியது.) 'இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா? என்பது கேள்வி. ரிஷி சொல்கிருர் :-'அரசனே. நீ என்னேடு பாதசாரி யாக வருவாயானல் தெரியப்படுத்துகிறேன்' என்று. அப்படிக்கு பாதசாரியாகப் போகும்போது, கன்னட தேச ராஜகுமாரத்திக்கு விவாகம் நிச்சயித்திருப்பதால், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு வந்திருக்கிறபோது, அவ்விடத்திற்கு மேற் படி அரசனும் ரிஷியும் இருவருமாகப் போய்ச்சேர்ந்தார் கள். இப்படி எல்லோரும் விவாகமண்டபத்தில் கூடி யிருக்க, அந்த விவாகமண்டபத்தில் ஒரு பால்ய ஸ்ந்யாஸி யும் வேடிக்கை பார்க்க வந்தார். கன்னடத்து ராஜ குமாரி எந்த ராஜகுமாரனை விவாகம் செய்துகொள்ளு கிருய்?" என்று தோழியானவள் கேட்டுக்கொண்டே