பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிருர்கள். லெளகீக விஷயங்களைப் போலவே மதவிஷயங் களிலும் ஒப்பு. உடன்பிறப்பு, விடுதலை மூன்றும் பாராட்டவேண்டும். பாரதியார் பல இடங்களில் தமது கடவுட் கொள்கையைக் கூ றி யி ரு ந் த போதிலும், இத்தனை தெளிவாக உரைநடையில் கூறவில்லை என்று கருதியதால், இதற்குத் தனியிடம் தந்துள்ளேன்.) பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞான தானம் செய்த சில பெரியோரின் வசனங்களை இங்கு கோத் தெழுதுகிறேன். தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும் படி தமிழ் நாட்டு மஹா ஜனங்களை வேண்டுகிறேன். தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவி சொல்லுகிருர் : "கல்லைக் குவித்துப் பெரிய கோயில்கள் ஏன் கட்டு கிறீர்கள்? தெய்வம் உள்ளுக்குள்ளே யிருப்பதை யறி யாமல், வீளுக ஏன் தொல்லைப் படுகிறீர்கள்?" ஸ்வாமி விவேகானந்தர் :- ஒவ்வொரு மனித னுடைய அறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும் உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்யவேண்டிய காரியம். செய்கை, அன்பு, யோகம், ஞானம் இவற்றினல் அந்தப் பொருளையடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்ம முழுதும் இஃதேயாம். மற்றப் படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள், சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம் பrமாகக் கருதத்தக்க உபகரணங்களே யன்றி வேறில்லை,” Luлг. &s.-Il