பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I62 அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானிய மாகிய எமெர்ஸன் சொல்லுகிருர் : "எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தை நான் பார்ப்பதற்குத் தடை யுண்டாகிறது, ஒவ்வொரு வனும் தன்னுள்ளே யிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடி வைத்துவிட்டு, மற்ருெருவனுடைய தெய்வத்தையும், மற்ருெருவனுக்கு வேருெருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க்கதைகளை என்னிடம் சொல்ல வருகிருன்." த்ஸென் - தஸே - த்ஸாங் என்ற சீனதேசத்து ஞானி சொல்லுகிருர் : "பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர் மாறனது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்ருகத் தெரிந்து கொள்ளுகிறது. நமது பாட்டன்மாரும் பூட்டன் மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டு மென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புகளையே பெரியவனை போதும் போட்டுக் கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்.” மேற்கூறிய எமெர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும் நல்ல ஞானியுமான தோரோ சொல்லுகிருர் : "என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமது காலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணுக மதிக்கிறது; சிற்சில சமயங்களில் பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்!” ராமகிருஷ்ண பரமஹம்ஸர் :