பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கடல் இனிது. மலை இனிது. காடு இனிது. ஆறுகள் இனியன. உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும் காயும், கணியும் இனியன.பறவைகள் இனியன. மெய்யகத்தே சட வஸ்துவில்லை! மண்ணுங் கல்லும் சடமில்லை! மெய்யுரைப்பேன் பேய் மனமே! மேலும் கீழும் பயமில்லை!- (1) பையப் பையத் தேரடா! படையும் விஷமுங் களவடா! பொய்யு மெய்யுஞ் சிவனடா! பூமண்டலத்தே பயமில்லை!- (2) சாவு நோவுஞ் சிவனடா! சண்டையும் வாளுஞ் சிவனடா! பாவியு மேழையும் பாம்பும் பசுவும் பண்ணுந் தானமுந் தெய்வமடா: (3) எங்குஞ் சிவனைக் காணடா! ஈனப் பயத்தைத் துரத்தடா! கங்கைச் சடையா, காலன் கூற்றே காமன் பகையே வாழ்க நீ!- (4) பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம் பாலை வனமுங் கடலுந் தெய்வம் ஏழு புவியும் தெய்வம் தெய்வம் எங்குந் தெய்வம் எதுவுந் தெய்வம். (5) வையத்தே சடமில்லை, மண்ணுங் கல்லுந் தெய்வம் மெய்யுரைப்பேன் பாழ் மனமே மேலுங் கீழும் பயமில்லைl-' (6)