பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இலாகவமுடையன; இன்பந் தரித்தன; மிக எளிதில் இயங்குவன: மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்துவிட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹlன முடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்: நான் ஆற்றல்; நான் வலிமை யின்றி நோயுறல் யாங்ங்ன மியலும்? ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப் பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத்தன்மையால் நான் எ ய் து ம் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன். என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை, கால்கள்-இவையெல்லாம் முற்றிலும் ஆரோக்கிய முடையன; நோயற்றன: நோயுறத்தகாதன; எக்காலும் நோயுற மாட்டா. என் மனம் ஆரோக்கியமே வடிவுகொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் தாக்கப்படாதன. நோய்களையும் அசுத்தங்களையும் நான் அறவே எறிந்து விட்டேன். அவை மீண்டு வராதபடி அவற்றைச் சூன்யத் திற்குள்ளே வீழ்த்தி விட்டேன். நானே ஆரோக்கியம். நான் தேவன். அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள் நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன், நான்