பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 இந்த மதம் ஸந்யாசத்தை ஆதரிப்பதன்று: இஹலோஹத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்றே நாக்கமுடையது. குருக்களுக்குள்ளே மேற்படி மத வேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தம் தம் மனப்படி வைத்து வணங்கி வந்தனர். சங்கராசார்யார் கொள்கையை அனுசரிப்போர், "எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம் என்று சொல்லியது பொது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும் சித்தர்களும் இடைக்கிடையே தோன்றி, "ஒரே பரம்பொருளைத்தான் ஆறு மதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன என்ற ஞாபகத்தை, ஜனங் களுக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள். மேற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற் கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு rணமடைந்து போனதாகக் கூறலாம். ஒருவாறு என்றேன்; ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத்தவிர மற்றவை முழுதும் rணமடைய வில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுதிலும் கணபதி பூஜை உண்டு. ஆனல் கணபதியே முதற் கடவு ளென்று பாராட்டும் காணபத்ய மதம் பரவி நிற்கவில்லை. மஹாராஷ்டிரத்தில் இக்கொள்கை யுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி. நிச்சயமாகத் தெரி யாது. அக்னிபூஜை பிராமணர்க்குள் இருக்கிறது. ஆனல் ஆக்னேய மதம் இல்லை.