பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மாட்டாமல் அழுவதையும், இன்னும் உன்னுடைய பலஹlனங்கள், அதைரியங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொருமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்பவேண்டுமானல், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால் முடியும். மற்றபடி ஏமாற்றலினலும், வேஷங் களாலும், நடிப்புக்களாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே, இங்கிலீஷில் 'எந்த மனிதனும், தன் சொந்த ஊரில் தீர்க்கதரிசியாக மாட்டான்' என்ருெரு வசனம் சொல்லுகிரு.ர்கள். முஹம்மது நபியை முதல் முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யந் தோன்றும்படி கதீஜா பீவியும் கடவுளின் முக்கிய பக்தரென்றும், தெய்வ அருள் பெற்றவ ரென்றும், பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்த மஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்ட தைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி யென் பதும், பக்தகுல சிரோமணி யென்பதும் மிக்த் தெளிவாக விளங்குகின்றன. மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்து விட்டார்கள். அவருடைய மதம் நாளுக்குநாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்ரஹாராதனைக்காரருக்குப் பொருமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டி விட்டது. இது 622 கி. பி. வருஷத்தில் நடந்தது. அப்பால்,