பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£IS கடவுளென்கிருேம். எல்லாம் அவன்; உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள். அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம் யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூல ரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை. எனினும், ஜகத்தில் ஞானமயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை யெய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிருேம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹருதயத்தில் அந்தக்கரணத்துக்கு நன்ருக விளங்கும் வண்ணம் குடி புகுந்து கற்றறிந்தவனுடைய அறிவு முழு வதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவி போலே யாக்கிக்கொண்டு, புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழி காட்டிகளாகும்படி பரிபூர்ண சைதன்ய நிலையிலே நடத்திக் கொண்டுவரத் திருவுளம் பற்றுவராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்து நாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க. இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத் திற்குப் பின்பு, முஸல்மான்களிலே, ஷியா ஸ சந்நி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின. குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை,