பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மெளன வாயும், வரந்தரு கையும், உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான், ஒமெனும் நிலையில் ஒளியாய்த் திகழ்வான். வேத முனிவர் விரிவாய்ப் புகழ்ந்த பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும் தானே யாகிய தனிமுதற் கடவுள், யானென தற்ருர் ஞானமே தானுய் முக்தி நிலைக்கு மூலவித் தாவான், சத்தெனவ சத்தெனச் சதுர்மறை யாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள், ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை, வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை, வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை முப்பொழு தேத்திப் பணிவது முறையே. இறைவி இறைவன் இரண்டும் ஒன்ருகித் தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய் உள்ளொளி யாகி உலகெலாந் திகழும் பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும் தேவ தேவா! சிவனே! கண்ணு வேலா! சாத்தா விநாயகா மாடா! இருளா! சூரியா! இந்துவே! சக்தியே! வாணி காளி மாமக ளேயோ! ஆணுய்ப் பெண்ணுய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே! வேதச் சுடரே! மெய்யாங் கடவுளே! அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்; நோவு வேண்டேன். நூருண்டு வேண்டினேன்;