பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 என்பது ஒன்று உண்டல்லவா? குழலிசை என்ருலே பாரதி யாருக்குக் கண்ணன் நினைவு வந்து விடுகிறது. செல்வம் வேண்டும்; எப்படியாவது செல்வத்தை ஈட்டவேண்டும் என்பது பாரதியாரின் விருப்பம். இஃது ஒர் இணையற்ற பாடலாகும். பாரதியார் வாயிலிருந்து ஓம் சக்தி: ஓம் சக்தி என்று வீரகர்ஜனையோடு வெளிப்படும்போது மயிர்க் கூச்செறியும்.) ஒம் சக்தி ஒம் சக்தி ஓம் - பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஒம். ஒம் சக்தி ஒம் சக்தி ஓம் - பராசக்தி ஓம் சக்தி ஒம் சக்தி ஒம். கணபதி ராயன் - அவனிரு காலைப் பிடித்திடுவோம் குண முயர்ந் திடவே - விடுதலை கூடி மகிழ்ந்திடவே. (ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்) சொல்லுக் கடங்காவே - பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்; வல்லமை தந்திடு வாள் - பராசக்தி வாழி யென்றே துதிப்போம். (ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்) வெற்றி வடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்; சுற்றி நில்லாதே போ! - பகையே! துள்ளி வருகுது வேல். (ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்)